-
ஆனால், இப்படி 'நீங்கள்' வேண்டிக்கொள்ளவேண்டும் என்று அல்லாஹ் எங்களுக்குச் சொல்லியுள்ளான், எனவே இவைகள் 'அல்லாஹ்வின் வார்த்தைகளே' என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.
-
இவ்வசனங்களில் அடிக்கோடிட்ட வார்த்தைகளை கவனித்துப்பாருங்கள். அவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல, அவைகள் இப்லீஷின் வார்த்தைகள். அடிக்கோடு இடாத வார்த்தைகள் தான் அல்லாஹ்வின் வார்த்தைகள்.
-
ஒரு கிறிஸ்தவ நண்பர் என்னிடம், இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது அவர்கள் பற்றி சுருக்கமாக சொல்லமுடியுமா? என்று கேட்டார். அவரிடம் சில நிமிடங்கள் பேசி சுருக்கமாக கீழ்கண்ட விவரங்களைச் சொன்னேன். முஹம்மது தம்மை தீர்க்கதரிசியாக பிரகடனப்படுத்திய பிறகு மக்காவிலும், மதினாவிலும் வாழ்ந்தார். அதன் சுருக்கத்தை ஆண்டு வாரியாக கொடுத்துள்ளேன்.
-
குர்ஆன் இயேசுவைய் மஸீஹா என்று அடிக்கடி அழைக்கிறது. அந்த மஸீஹா தான் பிரதான மேய்ப்பராக வெளிப்படுவார் என்று பழைய ஏற்பாடும் கூறியுள்ளது. மஸீஹா பற்றி ஏன் வேதத்தில் முன்னறிவிக்கப்படவேண்டும்? அவர் எப்படி தாவீதின் சிங்காசனத்தில் என்றென்றும் உட்கார்ந்து ஆட்சி செய்வார்? அப்படியென்றால், மஸீஹா நித்தியமானவர் என்றல்லவா பொருள்படுகிறது? ஒருவர் நித்தியமானவராக இருந்தால் அவர் இறைவன் தானே!
-
கடந்த 10 ஆண்டுகளாக ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் பதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் கட்டுரைகளை ஆண்ட்ராய்ட் மொபைள் அப்ளிகேஷனாக (Android Mobile App) மாற்ற கர்த்தர் கிருபை அளித்தார். இதுவரை பதிக்கப்பட்ட 650+க்கும் அதிகமான கட்டுரைகள் இந்த மொபைள் ஆப்பிள் ஆஃப்லைனில் (offline) படிக்கலாம்.
-
தற்போது காஸாவில் நிலவும் சூழ்நிலையை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம். இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலினால் பாதிக்கப்படும் சின்னங்சிறு குழந்தைகள் அனுபவிக்கும் வேதனையை ஊடகங்கள் விவரிக்கின்றன, மற்றும் பாலஸ்தீனா மீது இரக்கம் கொள்ளும் மக்கள் இந்த செய்திகளைக் கண்டு, கோபங்கொள்கின்றனர். அதே நேரத்தில், யூத நாட்டின் பக்கம் உள்ள மக்கள், இரத்தம் சொட்டும் எரிந்த முகங்களோடு காணப்படும் குழந்தைகளைக் கண்டு மனம் வருந்தினாலும், தங்கள் மீது தாக்குதல்(collateral damage) நடத்துபவர்களை எப்படி சமாளிக்க முடியும்? என்று கேட்டு, இஸ்ரேலின் செயலை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் என்ற நாட்டை அழிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஹமாஸ்(Hamas) என்ற இயக்கம் தொடர்ந்து ஏவுகனைகளோடு தாக்கும் போது, அதனிடமிருந்து தப்பிப்பதற்காக நடத்தப்படும் "ஒரு தற்காப்பு போர் இல்லையா இது?".